வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர்: சிஆர்பிஎப் வீரர்கள் நக்சல்களுக்கு எதிராக போராடி வருகின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் ஜக்தல்பூரில், 84வது மத்திய போலீஸ் படை ( சிஆர்பிஎப்) தினத்தை முன்னிட்டு, பணியின் போது உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், சிஆர்பிஎப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
சமீபகாலமாக சிஆர்பிஎப் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள் நக்சல்களுக்கு எதிராக போராடி, நாட்டின் பல பகுதிகளில், அவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால் நக்சலைட் தாக்குதல் குறைந்துள்ளது.

இந்தாண்டு நக்சலைட் தாக்குதல் அதிகம் நடைபெறும் இடமான சத்தீஸ்கரில் முதல் முறையாக, சிஆர்பிஎப் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு சிஆர்பிஎப் பெரிய பங்கு வகிக்கிறது. பெண் சிஆர்பிஎப் வீரர்களுக்கு தேச வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.