நாகாலாந்தில் 8 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமல்| Special Armed Forces Act implemented in 8 districts of Nagaland | Dinamalar

நாகாலாந்தில் 8 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமல்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (2) | |
கோஹிமா: நாகாலாந்தில் மேலும் 8 மாவட்டங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துவதாக இன்று (மார்ச் 25) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஏ.எப்.எஸ்.பி.ஏ: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் உள்ள மாவட்டங்களில், ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதன்படி,

கோஹிமா: நாகாலாந்தில் மேலும் 8 மாவட்டங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துவதாக இன்று (மார்ச் 25) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



latest tamil news



ஏ.எப்.எஸ்.பி.ஏ:


வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் உள்ள மாவட்டங்களில், ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, ராணுவத்தினர் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதுடன், யாரையும், 'வாரன்ட்' இன்றி கைது செய்யலாம். இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது.



அமல்


இந்நிலையில் நாகாலாந்தில் மேலும் 8 மாவட்டங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துவதாக இன்று (மார்ச் 25) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



latest tamil news


8 மாவட்டங்களுடன் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள 21 போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளிலும் சட்டம் அமலில் இருக்கும். இது ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.



நீட்டிப்பு:


நாகாலாந்தின் திமாபூர், நியுலாண்ட், சுமோகெடிமா, நோக்லாக், பெரன் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏ.எப்.எஸ்.பி.ஏ., நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X