கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்து கொல்லனூர் குருவம்மாள் கோவில் அடுத்துள்ள பள்ளத்தை ஒட்டிய பட்டா நிலத்தில் ஆண் யானை ஒன்று அங்குள்ள மின்சார கம்பத்தில் சிக்கி உயிரிழந்தது.
நேற்று இரவு இப்பகுதியில் சுற்றிய சுமார், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தனது உடலை அங்குள்ள மின்சார கம்பத்தின் மீது உரசியது. அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பம் யானை மீது விழுந்தது. இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலய வனத்திலும் 20 வயது பெண் யானை உயிரிழந்தது.