வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: நீதிபதிகள் நியமனத்தில் சமுக நீதி கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரூபாய் 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு காணொளியில் மயிலாடுதுறை நீதிமன்றங்களை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு , உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டு வழக்குகளை நடத்தியது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாவது மகிழ்ச்சி. சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டவர் கருணாநிதி. நீதித்துறை உள்கட்டமைப்பில் தொலைநோக்கு பார்வையுடன் திமுக அரசு செயல்படுகிறது.
3 மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட 44 புதிய நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமுக நீதி கடைப்பிடிக்க வேண்டும்.
நீதித்துறை தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு ஒவ்வொரு சாமானிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். விரைந்து நீதி வழங்க உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் ஆகும்.
சுப்ரீம் கோர்ட் கிளைகளை சென்னை, மும்பை, கோல்கட்டா நகரங்களில் ்அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு நீதியை வழங்கியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.