கடமையை நிறைவேற்றாத பிரிட்டன்: ஜெய்சங்கர்| Obligations Werent Met: S Jaishankar On Protest At Indian Mission In UK | Dinamalar

கடமையை நிறைவேற்றாத பிரிட்டன்: ஜெய்சங்கர்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (13) | |
புதுடில்லி: '' தூதரகங்களை பாதுகாக்க வேண்டிய கடமையை பிரிட்டன் நிறைவேற்றவில்லை'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19 ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
Obligations Werent Met: S Jaishankar On Protest At Indian Mission In UKகடமையை நிறைவேற்றாத பிரிட்டன்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: '' தூதரகங்களை பாதுகாக்க வேண்டிய கடமையை பிரிட்டன் நிறைவேற்றவில்லை'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, மார்ச் 19 ல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.


latest tamil news


அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.


இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: ஒரு நாட்டில் தூதர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், தூதரகம் மற்றும் தூதரக சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. இந்த கடமை நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் அரசுடன் பேசி வருகிறோம்.



latest tamil news

பாதுகாப்பு குறித்து பல நாடுகள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றன. தங்களது சொந்த பாதுகாப்புக்கு ஒரு கொள்கையும், மற்றவர்களின் பாதுகாப்புக்கு வேறொரு கொள்கையையும் கடைப்பிடிக்கின்றன. இதுபோன்ற வேறுபட்ட கொள்கைகளை வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X