வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: எம்.பி., எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய 3 மாதம் அவகாசம் தருவதை முட்டாள் தனம் என்றவர் ராகுல் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ராகுலின் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, முதல்வர் ஸ்டாலின், ‛ ராகுல் மீதான நடவடிக்கைக்கு கடும் கண்டனம். ராகுலை பார்த்து பா.ஜ., தலைமை பயந்திருக்கிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்.பி.,க்கு கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை இல்லை என்ற மிரட்டும் தொனியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: எம்.பி., எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய 3 மாதம் அவகாசம் தருவதை முட்டாள் தனம் என்றவர் ராகுல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை அவமதித்ததற்காக நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயகத்தை ஆதரிக்கும் மக்களாக மாறுவேடத்தில் இருக்கும் உங்களைப் போன்ற எதேச்சதிகாரர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மீது பொய் புகார் கூறியதற்காக கோர்ட்டில் ராகுல் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.