வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: '' நாட்டு மக்களின் முயற்சி காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபலப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீசாய் மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: மருத்துவ கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநில மொழியில் மருத்துவ கல்வி கற்பிக்கப்படுகிறது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது. மருத்துவ வசதிகளை மக்கள் எளிதாக அணுக வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உள்கட்டமைப்புகளை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்.

அசாதி கா அம்ரித் மஹோத்சவ் காலகட்டத்தில் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது. குறுகிய காலத்தில் இந்தியா வளர்ச்சி பெறும் என பலர் கேள்வி எழுப்பினர். பல சவால்கள், பல பணிகள் உள்ளன.
2047 க்குள் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற அனைவரின் பங்களிப்பு தேவை என்பதை பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. அனைத்து மக்களின் முயற்சி காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று(மார்ச் 25) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் டிக்கெட் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.