திருச்சி: திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவி சங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே, துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக பணிபுரிந்தவர் ரவிசங்கர், 42. துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பில் வசித்த அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி, பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கிக் கிடந்தார்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தற்கொலை செய்த ரவிசங்கருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சாய் வர்ஷன் என்ற 6 வயதில் மகனும் உள்ளனர்.