நமது தேவைகள், ஆசைகளை அடைய பணம் அவசியம். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், நேர்மையான வழியில் சேர்க்கும் பணம் நமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரும். நாம் உழைத்து ஈட்டும் பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் நம் வங்கிக் கணக்கில் ரூ.1 கோடியை பார்க்க முடியும். அது எப்படி என அறிந்துகொள்வோம்.
பணத்தை முதலீடு செய்ய ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை, தங்கம், வங்கி டெபாசிட் என பலவகை இருக்கின்றது. அதன் மூலம் ரூ.1 கோடி சேமிப்பு இலக்கை எட்ட எவ்வளவு காலம் ஆகும். எவ்வளவு மாதம் சேமிக்க வேண்டும் என பார்ப்போம்.
2022 நிலவரப்படி மேற்கூறிய முதலீட்டு வகைகள் 10 ஆண்டுகளில் ஈட்டியுள்ள சராசரி வருவாய் என்ன என்பது இந்த அட்டவனையில் உள்ளது
இந்த வருமானத்தை மாதிரியாகக் கொண்டால் ரூ.1 கோடி சேர்க்க எந்த முதலீட்டு வகைக்கு எவ்வளவு ஆகும் என்பது இதோ உள்ளது.
பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டில் மாதம் ரூ.10,000 என 21 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுகளை குறைக்க விரும்பினால் தொகையை கூட்ட வேண்டும், மாதம் ரூ.20,000 என முதலீடு செய்தால் 16 ஆண்டுகளில் உங்கள் வங்கிக் கணக்க்கில் ரூ.1 கோடி இருக்கும்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் 10.4% ஆண்டு வளர்ச்சி அடைபவையாக உள்ளன. அதில், வளர்ச்சி வாய்ப்புள்ள இடமாக பார்த்து இன்று ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 24 ஆண்டுகளில் அது ரூ.1 கோடிக்கு மேல் வளர்ந்திருக்கும். ரூ.20 லட்சம் முதலீடு செய்தால், 17 ஆண்டுகளில் அது ரூ.1 கோடி ஆக பெருகியிருக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 10% ரிட்டன் வழங்கியுள்ளன. இது இருப்பதிலேயே ரிஸ்க்கான முதலீடு. விவரம் தெரிந்தவர்களே சறுக்கும் முதலீடு. இருந்தாலும், இதில் எவ்வளவு முதலீடு செய்தால் ரூ.1 கோடி பெறலாம் என தெரிந்து வைத்துக்கொள்வோம். மாதம் ரூ.10,000 என 23 ஆண்டுகள் பங்குச்சந்தையில் முதலீட்டினைத் தொடர்ந்தால் ரூ.1 கோடி கார்பஸ் கிடைக்கும். மாதம் ரூ.20 ஆயிரம் எனில் அதே ரூ.1 கோடியை 17 ஆண்டுகளில் எடுக்கலாம்.
டெர்ம் டெபாசிட் என்பது இருப்பதிலேயே பாதுகாப்பான முதலீடு. வங்கி நிர்வாகத்தைப் பொறுத்து இதிலும் சில ரிஸ்க்குகள் உள்ளன. இருந்தாலும், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரிஸ்க் குறைவு. டெர்ம் டெபாசிட்டின் 10 ஆண்டுகால சராசரி ஆண்டு ரிட்டர்ன் 7.3%. மாதம் ரூ.10,000 என 27 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.1 கோடியை பெற முடியும். ரூ.20 ஆயிரம் என 19 ஆண்டுகள் கட்டினாலே ரூ.1 கோடியை பெறலாம்.
தங்கத்திலும் பலர் முதலீடு செய்ய விரும்புவர். ஆபரணத் தங்கத்தில் முதலீடு என்பது தேய்மானம் தான். அதுவே தங்கப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வது வளர்ச்சியைத் தரக்கூடியது. தங்கம் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 6.7% ரிட்டர்ன் வழங்கியிருக்கிறது. அதன் படி மாதம் ரூ.10 ஆயிரம் என 28 ஆண்டுகள் கட்டினால் நீங்கள் கோடீஸ்வரர். தொகையை ரூ.20 ஆயிரமாக கூட்டினால் ஆண்டுகள் 20 ஆக குறையும்.
நமது தேவைகள், ஆசைகளை அடைய பணம் அவசியம். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், நேர்மையான வழியில் சேர்க்கும் பணம் நமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரும். நாம் உழைத்து
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->