டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான அபாச்சி பைக் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏராளமான இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையே வைத்துள்ளது. அதே போல் இந்த ஆண்டும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,65,872 பைக்குகளை இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
![]()
|
இந்திய சந்தையில் மட்டும் கடந்த மாதத்தில் 2,21,402 பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டவைகளை காட்டிலும் 48 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் அதிகமாகும். குறிப்பாக டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான அபாச்சி, ஐக்யூப் எலக்ட்ரிக், ஜூபிட்டர் உள்ளிட்டவை அமோகமாக விற்பனையகி இருக்கிறது. அதிலும் இந்த ஜூபிட்டர் ஸ்கூட்டர் கடந்த பிப்ரவரி மாதத்தில் 53,891 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 47,092 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலமாக ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 14.44% அதிகரித்துள்ளது.
![]()
|
அடுத்து அதிகமாக விற்பனையான டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் என்றால் எக்ஸ்.எல்100 மினி. இந்த ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் பிப்ரவரியில் 35,346 எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல், அடுத்ததாக டிவிஎஸ் அபாச்சி மற்றும் ரைடர் பைக்குகளும் கடந்த பிப்ரவரியில் அதிகமான விற்பனை எண்ணிக்கையையே பதிவு செய்துள்ளது.
![]()
|
அதாவது, அபாச்சி மாடலை பொறுத்தவரை, 34,935 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. அதேபோல் ரைடர் பைக்கானது, 30,346 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் இரண்டு பைக்குகுகளும் 16,406 மற்றும் 14,744 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.