பாட்னா: ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலில் மூழ்கியவர்கள் என பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் எனக்கூறியுள்ளார்.
பாட்னாவில் நிருபர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ராகுல் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி., அல்ல. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் காங்கிரஸ் மேல்முறையீடு செய்யவில்லை?இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினை சேர்ந்தவர்களை ராகுல் அவமானப்படுத்தியுள்ளார். வேண்டுமேன்றே அதனை செய்துள்ளார். உங்களுக்கு விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால், இழிவுபடுத்த அல்ல.

கர்நாடகா தேர்தல் வருவதால், தியாகி போல் காட்டி கொள்ள அவர் நினைக்கிறார். அவர் மீது இன்னும் 7 வழக்குகள் உள்ளன. ராகுல் விவகாரத்தில் காங்கிரசுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.மக்களை திசைதிருப்பவும் தவறாக நடத்தவும் முயற்சிக்கிறார்.
பிரிட்டன் பேச்சு குறித்து ராகுல் பொய் சொல்கிறார்.தேர்தலில் தோல்வியடைந்துவிட்டு லண்டன் சென்று அழுகிறார். ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல்வாதிகள்.ஊழலில் மூழ்கி போயுள்ளனர். ஊழல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர் ராகுல்.
ஐமு கூட்டணி ஆட்சியின் போதுதான் அதானிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்தது. அதானியை நாங்கள் எப்போதும் பாதுகாத்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.