வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில், 166 கோடியில், கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கும் பணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது என்பதே எங்கள் நிலைப்பாடு. சட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற நடைமுறையை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்கள் பயன்பெற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க வேண்டும்.

தீர்ப்புகளை மொழி பெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக்க அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும்.
நீதித்துறையில் மற்ற மாநிலங்கள் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு காணொலி மூலம் விசாரணை நடக்கிறது. நீண்ட தொலைவில் இருப்பவர்கள் கூட அதில் பங்கேற்க முடியும். கோவிட் காலத்தில் 2.68 கோடி வழக்குகள் தீர்வு காணந்நவ்வுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் பின்தங்கிய மக்கள், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.