மத்திய அரசு நீதித்துறை இடையே மோதல் இல்லை: மத்திய அமைச்சர்

Added : மார் 25, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ பேசியதாவது: அரசு நீதித்துறை இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது முரண்பாடுகள் இல்லை. இது உலகம் முழுவதும் தவறான செய்தியை அனுப்புகிறது. பல விதமான அமைப்புகளுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு
Differences between govt and judiciary doesnt mean confrontation: Law Minister Kiren Rijijuமத்திய அரசு நீதித்துறை இடையே மோதல் இல்லை: மத்திய அமைச்சர்

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ பேசியதாவது:

அரசு நீதித்துறை இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது முரண்பாடுகள் இல்லை. இது உலகம் முழுவதும் தவறான செய்தியை அனுப்புகிறது. பல விதமான அமைப்புகளுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கண்ணோட்டத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை முரண்பாடுகள் அல்ல. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட அரசு எப்போதும் ஆதரிக்கும். மாநிலங்களில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களுக்காக கடந்தாண்டு அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சில மாநிலங்களில், நீதிமன்றங்களின் தேவை மற்றும் அரசை புரிந்து கொள்வது ஆகியவற்றில் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது.

எதிர்காலத்தில், நீதித்துறை காகிதமில்லா துறையாக மாற வேண்டும்.

தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் ஆதாரங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக வழக்குகளை நீதிபதிகள் ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இதற்கான பணிகள் நடந்து கொண்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Oru Indiyan - Chennai,இந்தியா
25-மார்-202317:55:48 IST Report Abuse
Oru Indiyan தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீத வழக்கறிஞர்கள் திராவிடிய கட்சியினர். இன்னும் இருபது வருடங்களில் அனைத்து நீதிபதிகளும் இவர்கள் தான். பிறகு நீதி என்பதே இல்லாமல் போய் விடும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
25-மார்-202317:30:08 IST Report Abuse
GMM கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுக்கு மூல காரணம் வழக்கறிஞர்கள். (எனது அனுபவம்). அரசு தும்பை விட்டு வாலை பிடிக்கிறது. குற்றவாளிக்கு சாதகமாக வழக்காட வழக்கறிஞர்கள் அரசு நிர்வாக விதிமுறைகள் விரும்புவது இல்லை. அரசு முதலில் வழக்கறிஞரை ஒழுங்குபடுத்த வேண்டும். தவறான வாதம் ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டால், வழக்கு விசாரணை தொடர கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X