வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை,ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை.
தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. அதன் படி, கேரளா- 26.4%, மஹாராஷ்டிரா - 21.7 %, குஜராத் - 13.9%, கர்நாடகா- 8.6%, தமிழகம்- 6.3% உயர்துள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாச பிரச்னை பாதிப்பு அதிகமுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். மருத்துவமனையில் படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.