வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தவாங்கரே: கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜின் கொண்ட பா.ஜ., அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபல்லாப்பூரில் நடந்த விழாவில் மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு, மைசூருவில் மெட்ரோ ரயில் சேவையையும் துவக்கினார்.
பிறகு தவாங்கரே பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் வந்த மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மோடி பேசுகையில், கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜீன் கொண்ட பா.ஜ., அரசை அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். மாநிலத்தில் முன்னர் சுயநல மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகள் ஆட்சியில் இருந்தன.
இதனால், மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பா.ஜ., அரசு தேவைப்பட்டது. மோடிக்கு கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால், மாநிலத்தில் தாமரையை மலர வைக்க மக்கள் முடிவு செய்தது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறு மோடி பேசினார்.