வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குவாலியர்: தண்ணீர் வரி கட்டாததால் பால் வியாரியின் எருமை மாடை பறிமுதல் செய்யும் குவாலியர் நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் நடவடிக்கை வைரலாகி வருகிறது.
![]()
|
ம.பி., மாநிலம் குவாலியர் நகராட்சிக்கு உட்பட்ட டேலியன் வாலா பகுதியை சேர்ந்தவர் பால்கிஷன்பால். பால் வியாபாரி . இவரது பண்ணைக்கு நகராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இந்நிலையில் பால் வியாபாரியான பால் கிஷன்பால் தண்ணீர் வரி பாக்கியாக ரூ.ஒரு லட்சத்து 39 ஆயிரம் வரையில் நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் வரியை கட்ட வலியுறுத்தி பல கட்டமாக அவருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை,
தொடர்ந்து பொறுமை இழந்த நகராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கியது.
குவாலியர் நகராட்சி கமிஷனர் கிஷார் கன்யால் வரிபாக்கியை வசூலிக்கும் பணியில் தீவிரம் காட்டினார். இதனையடுத்து பால் கிஷன் பால் பண்ணைக்கு சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த எருமை மாடுகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சட்டப்படி, நிலுவையில் உள்ள வரிகளை மீட்பதற்காக மதிப்புமிக்க பொருட்களை பறிமுதல் செய்யலாம். என்பதன் அடிப்படையில் பால் கிருஷ்ணா பாலின் வீட்டில், எருமை மாடு கிடைத்ததால், அதை உத்தரவாதமாக கைப்பற்றினோம். என கூறினர்
![]()
|
வரும் நவம்பர் மாதத்திற்குள் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும், ஆட்சியை பறிகொடுத்த காங்., மீண்டும் அரியணை ஏறவும் தயாராகி வருகின்றன.