வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்கேயம்:காங்கேயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
காங்கேயம் அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன் இவரது மனைவி சோபனா(24) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சோபனாவை காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் தினகர், மருத்துவ உதவியாளர் கலையரசி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தாயையும் குழந்தையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.