வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுலின் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வயநாட்டிற்கு இடைதேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
![]()
|
2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரசாரத்தின் போது மோடி என்னும் சமுதாயத்தை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான் வழக்கு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இருப்பினும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு எம்.பி.,தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராகுலின் மீதான வழக்கில் சூரத் கோர்ட் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.இதனிடையே பார்லியில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அடுத்த 14 மாதங்கள் வரையில் ராகுலை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
![]()
|
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி சட்டசபை மற்றும் பார்லி., உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அந்த காலி இடத்தை ஆறு மாத கால இடைவெளிக்குள் தேர்தல் ஆணையம் நிரப்ப வேண்டும். இதன் அடிப்படையில் ஆறு மாத கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் வரையில் உள்ளது. அதற்கு உள்ளாக ராகுலின் தொகுதியான வயநாடுக்கான தேர்தல் தேதி அறிவிப்பை எப்போது தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement