வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலம் முழுவதும் சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் புகையிலை பொருட்கள், மொபைல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
![]()
|
குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தலைமையில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் சிறைகளில் அதிரடி சோதனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அகமதாபாத், வதோதரா, சூரத், மற்றும் ராஜ்கோட் பகுதிளில் உள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 17 சிறைகள், கட்ச் பகுதியில் உள்ள பாலாரா கல்பாதர் ஆகிய சிறப்பு சிறைகளிலும் அதிரடிசோதனை நடத்தப்பட்டது.
![]()
|
குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் விகாஸ் சஹாய் கூறுகையில், அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்கள் மற்றும் சிறைத் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆன்லைனில் இணைக்கப்பட்ட பின்னர் சுமார் 1,700 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது 16 மொபைல்போன்கள், 10 எலக்ட்ரானிக்பொருட்கள் 39போதை பொருட்கள், 519 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறைக்குள் சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், கைதிகளுக்கு சட்டப்படி வழங்கப்படும் வசதிகள் குறித்தும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement