வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுலின் எம்.பி.,பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
![]()
|
இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பிரதமர் மற்றும் தொழில் அதிபர் அதானி இடையேயான உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு பதிலடியாக ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
ராகுல் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை முன்பாக நாளை (26-ம் தேதி ) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பங்கு பெற உள்ளனர்.
![]()
|
டில்லி ராஜ்காட்-ல் நடைபெறும் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா, மற்றும் வதேரா, பொது செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மாநில முதல்வர்களான அசோக்கெலாட், பூபேஷ்பாகல் உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.