வயலுார்: கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் ஊராட்சியில், அங்கன்வாடி மையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் 7.5 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு, ஜனவரி மாதம் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், சுத்திகரிப்பு நிலையம் துவங்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே பழுதாகி பயன்பாடில்லாமல் போனது.
இதை பயன்பாடிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாடிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.