திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதம் உத்திர விழா, 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த விழா நேற்று முன்தினம் முதல் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்., 1ம் தேதி சனிக்கிழமை அன்று, கமலத்தேர் திருவிழா நடைபெற உள்ளதால், அன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிவர்.
எனவே, அன்றைய தினம் பக்தர்களின் நலன் கருதி வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரம் பூஜை ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நேற்றைய தினம் மாந்தீஸ்வரர் பூஜைக்கு, 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.