திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் ரயில் நிலையம் சாலையில், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கு அடிமையாவதால் எதிர்கால பாதிப்பு, போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதன் அவசியம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விளக்கினர்.
போதைப் பொருள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் உடனடியாக காவல் துறையினரை அணுக வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.