தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி புதுப்பாக்கம் சட்டக்கல்லுாரி முதலிடம்
தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி புதுப்பாக்கம் சட்டக்கல்லுாரி முதலிடம்

தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி புதுப்பாக்கம் சட்டக்கல்லுாரி முதலிடம்

Added : மார் 25, 2023 | |
Advertisement
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுாரில் உள்ளது அம்பேத்கர் சட்டக்கல்லுாரி. இந்த கல்லுாரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 23ம் தேதி துவங்கியது.இப்போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகள் பங்கேற்றன. இப்போட்டி, பட்டரைபெரும்புதுார் அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி முதல்வர் முனைவர்



திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுாரில் உள்ளது அம்பேத்கர் சட்டக்கல்லுாரி. இந்த கல்லுாரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 23ம் தேதி துவங்கியது.

இப்போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகள் பங்கேற்றன. இப்போட்டி, பட்டரைபெரும்புதுார் அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி முதல்வர் முனைவர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது.

போட்டியை முன்னின்று நடத்தியதால் அம்பேத்கர் சட்டக்கல்லுாரி, இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இப்போட்டியில், ஒரு கல்லுாரிக்கு ஒரு குழு வீதம், மொத்தம் 18 கல்லுாரிகளில் இருந்து, 18 குழுக்களாக மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு குழுவினரும், வாதி, எதிர்வாதியாக வாதாடினர். மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக இருந்து, மாணவர்களின் குழுக்களுக்கு, மதிப்பெண் வழங்கினர்.

இப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில், வேலுார் அரசு சட்டக்கல்லுாரியும், சென்னை புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்டக்கல்லுாரியும் தங்கள் வாதாடும் திறனை வெளிப்படுத்தினர்.

இதில், புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்டக்கல்லுாரி, அதிக மதிப்பெண் பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பரிசுகளையும், கோப்பையையும் வழங்கினார்.

இதில், தி.மு.க., - மாநிலங்களவை எம்.பி., கிரிராஜன், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X