சென்னை: விடுதியில் பெண்கள் குளிப்பதை 'வீடியோ' எடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில், அதிகாலையில் புகும் மர்ம நபர், குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை, மொபைல் போனில் வீடியோ எடுப்பதாக, விடுதி நிர்வாகம், 14 மற்றும் 18ம் தேதிகளில், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தது.
போலீசார், தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், பெசன்ட் நகரைச் சேர்ந்த துரைராஜ், 27, என தெரிந்தது. நேற்று முன்தினம், போலீசார் இவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
துரைராஜ் மீது, திருட்டு, வழிப்பறி என ஒன்பது வழக்குகள் உள்ளன. அதிகாலையில், வீடுகளை நோட்டமிட்டு திருட செல்வார். அதுபோல் செல்லும்போது, விடுதி குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர், மொபைல் போனை பறித்ததுடன், வேறு எங்கேயாவது இதுபோன்று செயல்பட்டுள்ளாரா என விசாரிக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.