ராகுலின் எம்.பி., தகுதியை நீக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து... முறையீடு!

Updated : மார் 27, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி:காங்கிரசைச் சேர்ந்த ராகுலின், எம்.பி., தகுதியை நீக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதாலேயே, தானாகவே எம்.பி., பதவி தகுதியை இழக்கும் இந்த சட்டப் பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரி, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, கர்நாடக
Rahuls MP appeals against the law section that disqualified him!  ராகுலின் எம்.பி., தகுதியை நீக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து... முறையீடு!

புதுடில்லி:காங்கிரசைச் சேர்ந்த ராகுலின், எம்.பி., தகுதியை நீக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதாலேயே, தானாகவே எம்.பி., பதவி தகுதியை இழக்கும் இந்த சட்டப் பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரி, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரசின் ராகுல் பிரசாரம் செய்தபோது, 'ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என முடிகிறது?' என, பேசினார்.

மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு வெளிநாடு தப்பிய தொழிலதிபர்கள் நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் ஒப்பிட்டு, அவர் இவ்வாறு பேசியதாக புகார் எழுந்தது.


அவதுாறு வழக்குராகுல் பேச்சை எதிர்த்து, குஜராத்தின் சூரத் மேற்கு சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் குஜராத் அமைச்சருமான பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ராகுலை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, இந்த குற்றத்துக்காக, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியின் எம்.பி., பதவியில் இருந்து, ராகுலை தகுதி நீக்கம் செய்து, லோக்சபா செயலகம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த, ஆபா முரளீதரன் என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

காங்கிரசின் ராகுல், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக தாக்கல் செய்கிறேன்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவியில் தொடரும் தகுதியை தானாகவே இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதிப்புஇந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது, ஒருதலைபட்சமானது. மேலும், நம் நாட்டின் ஜனநாயகத்துக்கும் எதிரானது. மக்களின் குரலாக உள்ள, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., தன் கடமையை சுதந்திரமாக நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில், இந்தச் சட்டப் பிரிவு உள்ளது.

தற்போதைய சம்பவத்தை வைத்து பார்க்கையில், இயற்கை நீதிக்கு எதிராக, குற்றத்தின் தன்மையை பார்க்காமல், அரசியல் நோக்கத்துக்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

ராகுலின் பேச்சு, இந்த சமூகம் மற்றும் நாட்டில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராயாமல், பொதுவாக பதவி தகுதி இழப்பு செய்துள்ளது சட்டவிரோதமாகும்.

மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை சுதந்திரமாக செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த சட்டப் பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'மன்னிப்பு கேட்க மாட்டேன்'


காங்., முன்னாள் தலைவர் ராகுல்புதுடில்லியில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பார்லிமென்டில், ஆளும் தரப்பு அமளியில் ஈடுபட்டது. இதற்கு, லோக்சபாவில் பதிலளிக்க, லோக்சபா சபாநாயகர் எனக்கு அனுமதி வழங்கவில்லை.


லண்டனில் பேசியது மற்றும் மோடி குறித்து நான் கூறிய கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் வீர் சாவர்க்கர் அல்ல. அவர் தான் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கேட்டார். என்னை வாழ்நாள் முழுதும் தகுதி இழப்பு செய்தாலும், வாழ்நாள் முழுதும் சிறையில் அடைத்தாலும் அதற்காக கவலைப்பட மாட்டேன்.


இந்த நாட்டுக்காக என் கடமையை செய்வேன். அடுத்து நான் என்ன பேசுவேன் என்ற அச்சம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ளது. அவருடைய கண்ணில் பயத்தை பார்த்தேன். அதனால் தான், என்னை பார்லிமென்டில் பேச விடாமல் தடுத்தனர். என்னை தகுதி இழப்பு செய்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஏதோ முதல் முறையாக, ஒருவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் நாடகம் நாடுகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த ஆறுபேர் உட்பட இதுவரை, 32 பேர் பதவியை இழந்துள்ளனர்.


கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, மக்களிடையே அனுதாபம் பெறும் வகையில், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளதாக நாடகம் ஆடுகின்றனர்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அவதுாறாக பேசியதால் தான், ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், அவர் எம்.பி., பதவியில் தொடரும் தகுதியை இழந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (26)

27-மார்-202300:06:40 IST Report Abuse
பேசும் தமிழன் பிள்ளையை வளர்க்கும் போது நல்லதை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்....ஆளும் வளரனும் ...அறிவும் வளரனும் ...அது தான் வளர்ச்சி ...யாரையும் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது ....இவருக்கு தான் ஏதோ பட்டத்து இளவரசர் என்று நினைப்பு!!!
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
27-மார்-202300:01:09 IST Report Abuse
Davamani Arumuga Gounder மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர், எம்.பி...எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவியில் தொடரும் தகுதியை தானாகவே இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.... இந்த சட்டம் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அமல் செய்யப்பட்ட சட்டமா? .. 1947 ல் இருந்து காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் இந்த சட்டம் இல்லையா?
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
26-மார்-202319:57:01 IST Report Abuse
Sankar Ramu இதே ராகுல் தகுதி நீக்க காலவகாசம் ஏன்னு கேட்டாரு. இப்ப சட்டத்தையே எதிர்க்க இவருக்கு மட்டும் ரத்தமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X