திண்டிவனம் :ஒலக்கூர் வட்டத்தை சேர்ந்த ஆட்சிப்பாக்கம், சேந்தமங்கலம், ஆவணிப்பூர் கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவளத் திட் டங்கள் குறித்த கருத் தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் முனைவர் அன்புமணி வரவேற்றார். திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி பேசுகையில், நீர் வள நிலவள திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு துளி நீரிலும் அதிக வருமானம் கிடைக் கும். ஏரிப் பாசன பகுதிகளில் இந்த திட்டத்தின் மூலம் நீர் மற்றும் பயிர் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 8 அரசு துறைகள் ஒன்றிணைந்து விவசாயிகள் பங்கேற்புடன் வேளாண் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது. ஆர்வமுள்ள ஓங்கூர் வடிநில பகுதி ஏரிப்பாசன விவசாயிகள் இத்திட்டத் தில் சேர்ந்து பயனடையலாம். இந்த திட்டத்தில் செம்மை நெல் சாகுபடிக்கு தேவையான விதை உரம், விதைப்புச் சட்டம், பயிர் பாதுகாப்பு, மருந்துகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்றார். ஆட்சிப்பாக்கம், சேந்தமங்கலம், ஆவணிப்பூர் ஊராட்சி தலைவர்கள், ஏரிப்பாசன சங்க தலைவர்கள் மற்றும் 3 கிராமங்களைச் சேர்ந்த 120 விவசாயிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச் சியாளர் ஜெயலட்சுமி, சுப்பிரமணி செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE