வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா,-தன் பேச்சுகளின்போது, தவறான சில வார்த்தைகளை கூறி சர்ச்சையில் சிக்குவது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிதல்ல. கனடா பார்லிமென்டில், அந்த நாட்டை பாராட்டுவதற்கு பதிலாக சீனாவை பாராட்டி பேசி, நகைப்புக்குள்ளானார் ஜோ பைடன்.
![]()
|
அமெரிக்க அதிபராக, ௨௦௨௧ல் பதவியேற்ற ஜோ பைடன், முதல் முறையாக வட அமெரிக்க நாடான கனடாவுக்கு சென்றுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதம் நடத்தினார்.
இந்நிலையில், கனடா பார்லிமென்டில் நேற்று அவர் உரையாற்றினார். அப்போது, அவர், ''கனடாவின் புதிய அகதிகள் கொள்கையை நான் வரவேற்கிறேன். இந்த நல்ல முயற்சியை எடுத்ததற்காக, சீனாவை பாராட்டுகிறேன்,'' என குறிப்பிட்டார்.
![]()
|
தன் தவறை உணர்ந்த ஜோ பைடன், ''மன்னிக்கவும், கனடாவை பாராட்டுகிறேன். சீனா குறித்து நான் நினைத்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம்,'' என, அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பார்லி மென்டில் சிரிப்பலை எழுந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement