வேலாயுதம்பாளையம்: சைக்கோ அறக்கட்டளை சார்பில், கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் குந்தாணிபாளையத்தில் பள்ளியில் மாணவர்களை சேர்க்குமாறு விழிப்புணர்வு பேரணி நடந்தது.நிகழ்ச்சியில் சைக்கோ அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். இயக்குனர் கிறிஸ்துராஜ் பேரணியை துவக்கிவைத்து பேசினார். கருவறை காப்பக நிர்வாகி பிலோரணி கருத்துரையாற்றினார்.அறக்கட்டளை இயக்குனர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: குழந்தை தொழிலாளர்முறை சட்டத்தினால் மட்டும் தீர்க்கக்கூடிய பிரச்னை அல்ல. நியாயமான குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவது, கல்வி நிலையை உயர்த்துவது, கட்டாய ஆரம்பக்கல்வியை அமல்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களோடு சம்மந்தப்பட்டது.
எனவே அவ்வப்போது தற்காலிக நிவாரண நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடாமல் நீண்ட காலநோக்கில் சரியான திட்டமிடுதலின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். கட்டாய ஆரம்பக்கல்வியை அமுல்படுத்தினால்தான் குழந்தை தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்கமுடியும். போதுமான பள்ளிக்கூடங்கள் கட்டினாலும் ஆசிரியர்கள் இருந்தாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஏதுவாக, பெற்றோரின் வாழ்கைநிலையும் மாற்றப்பட்டால்தான் குழந்தை உழைப்பை நாம் தடுக்கமுடியும். எனவே பெற்றோரும் ஒத்துழைப்பு அறிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.குழந்தைகள் அமைப்புகளில் இருந்து 100க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். சைக்கோ அறக்கட்ளை பணியாளர் வனிதா நன்றி கூறினார்.