வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
![]()
|
கடந்த 2004 - -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது, பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. வேலை வாங்கித் தருவதற்கு லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
![]()
|
இந்நிலையில், லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி, நேற்று புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் துருவி துருவி எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, லாலு பிரசாத் யாதவின் மகளும், எம்.பி.,யுமான மிசா பார்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement