வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-பஞ்சாபின் ரூப்கர் மாவட்டத்தில் உள்ள அனந்த்பூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசில் கல்வித் துறை அமைச்சராக உள்ளார்.
![]()
|
இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவரும், பஞ்சாபின் மான்சா மாவட்ட, எஸ்.பி.,யுமான, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜோதி யாதவுடன், ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு, நேற்று எளிய முறையில் திருமணம் நடந்தது.
![]()
|
கடந்த ஆண்டு, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முதல்வர் பகவந்த் மான், குர்பிரீத் கவுரை திருமணம் செய்தார்.
இதே போல், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் நரீந்தர் கவுர் பராஜ் மற்றும் நரிந்தர் பால் சிங் சவானா ஆகியோரும் சமீபத்தில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement