வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறையிலிருந்தபடி உருக்கமான காதல் கடிதம் எழுதியுள்ளார்.
![]()
|
தொழில் அதிபரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு, புதுடில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இங்கு, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கையை அவர் அனுபவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மோசடி செய்த பணத்தில், பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்தார்.
இது தொடர்பாக ஜாக்குலின் மீதும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
இதற்கிடையே, திஹார் சிறையிலிருந்து, புதுடில்லியில் உள்ள வேறு ஒரு சிறைக்கு சுகேஷ் சந்திரசேகர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தன் பிறந்த நாளையொட்டி சமீபத்தில் நடிகை ஜாக்குலினுக்கு உருக்கமான காதல் கடிதத்தை சுகேஷ் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என் பேபி ஜாக்குலினுக்கு... என் பிறந்த நாளில் உன்னை காண முடியாமல் தவிக்கிறேன். நீ அருகில் இருக்கும் போது, என்னைச் சுற்றி ஒரு சக்தி இருக்கும்.
![]()
|
அது, இப்போது இல்லை என்பதை உணர்கிறேன். எனக்கு ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ஆனாலும், என் மீது நீ வைத்துள்ள காதல் எப்போதும் அழிவது இல்லை. உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியும். இதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.
இதயத்தை பரிசளித்த உனக்கு நன்றி. நீயும், உன் காதலும் எனக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பரிசு. நீயின்றி நானில்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் சுகேஷ் எழுதிஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement