வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-பஞ்சாப் போலீசாரிடம் தப்பிய காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், தன் அடையாளங்களை மறைத்து, 'மாடர்ன்' உடையில் சுற்றி வருவது தெரிய வந்ததை அடுத்து, புதுடில்லி உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
![]()
|
'வாரியர்ஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், பஞ்சாபின் அஜ்னாலா போலீஸ் ஸ்டேஷனை கடந்த மாதம் முற்றுகையிட்டு சூறையாடினார்.
பயங்கர ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், மாவட்ட எஸ்.பி., உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் அம்ரித்பால், போலீசாரின் கண்களில் மண்ணைத் துாவி தன் நெருங்கிய கூட்டாளியுடன் தப்பினார். இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அம்ரித்பால் மற்றும் அவரது கூட்டாளிக்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜீத் கவுர் என்ற பெண்ணை, ஹரியானா மாநில போலீசார் கைது செய்தனர்.
![]()
|
இதையடுத்து, அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், குடையால் முகத்தை மறைத்தபடியும், 'கோட், சூட்' கண்ணாடி சகிதமாக மாடர்ன் உடையிலும் அம்ரித்பால் சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது.
வழக்கமான ஆடைகளை அணியாமல், புதிய தோற்றத்தில் அமிர்தசரஸ், குருஷேத்ரா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, புதுடில்லியிலும் இவரின் நடமாட்டம் இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுடில்லி காஷ்மீரி கேட் பகுதி உட்பட மாநில எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement