வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கில் தீர்ப்பு வந்ததும், அக்கட்சியின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரேணுகா சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
![]()
|
'கடந்த 2018ல் பார்லி.,யில் பேசிய மோடி, என்னை ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசினார்; என் சிரிப்பு சூர்ப்பனகையைப் போல இருக்கிறது என்றார்; எனவே, மோடி மீது அவதுாறு வழக்கு தொடரப்போகிறேன்' என அவர் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரான ரேணுகாவுக்கு சட்டமே தெரியவில்லையே என சட்ட நிபுணர்களும், பா. ஜ., தலைவர்களும் கிண்டலடிக்கின்றனர்.
'சட்டசபையிலோ அல்லது பார்லி.,யிலோ உறுப்பினர்கள் எது வேண்டுமானாலும் பேசலாம்; அது சரியா, தவறா என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே உரிமை உண்டு; இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடாது' என்கின்றனர் அவர்கள். 'பார்லி.,யில் எம்.பி.,க்கள் பேசுவது அவர்களுடைய உரிமை; இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்' என குறிப்பிட்டு நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளன.
![]()
|
'ரேணுகா வழக்கு போடுவது என்பதெல்லாம் வெறும் வாய் உதார்; செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வார்' என்கின்றனர் பா.ஜ., சீனியர் தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement