வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: விஸ்வபாரதி பல்கலை விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27 ம் தேதி மேற்குவங்கம் செல்கிறார்.முதல்வர்மம்தா பானர்ஜி வரவேற்கிறார். மாநில பா.ஜ. தலைவர் விழாவில் பங்கேற்கவில்லை,
![]()
|
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் நகரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைகழத்தின் பட்டமளிப்பு விழா வரும் 28 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இரண்டுநாள் பயணமாக மேற்குவங்கம் செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு, மாநில கவர்னர் ஆனந்த்போஸ் மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது பா.ஜ., சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி முர்மு மற்றும் அவரை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த்சின்ஹா போட்டியிடுவார் என மம்தா பானர்ஜி அறிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத்யாதவ் மற்றும் தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருந்தனர். தேர்தலில் முர்மு வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
இதனிடையே ஜனாதிபதி பதவிக்கு பழங்குடியினப் பெண்ணை நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது தெரிந்திருந்தால் முர்மு 'ஒருமித்த' வேட்பாளராக அறிவித்திருந்திருக்கலாம் என்று மம்தா அந்தர் பல்டி அடித்தார். அதே நேரத்தில் மம்தாவின் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி முர்முவின் உருவத்தை கிண்டல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த மம்தா நாங்கள் ஜனாதிபதியை மிகவும் மதிக்கிறோம். அவர் மிகவும் இனிமையான பெண். என் கட்சியை சேர்ந்தவர் கூறிய கருத்துக்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
![]()
|
ஜனாதிபதி முர்மு பல்கலை.,விழாவில் கலந்து கொண்ட போதிலும் மாநில பா.ஜ.,தலைவரான சுவேந்து அதிகாரி விழாவில் கலந்து கொள்ளவில்லை. விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து அவர் கூறுகையில் விழா அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. இருப்பினும் வெளிமாநில நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற விருப்பதால் என்னால் ஜனாதிபதி விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என தெளிவுபடுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement