வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழக மக்களிடம் பா.ஜ., குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். வரும், 2024, 2026 தேர்தல்களுக்காக உழைப்போம். பா.ஜ.,வினர் கூண்டுக்கிளி அல்ல; 30 ஆண்டுகள் கூண்டுக்குள் இருந்ததால் நம்மால் பறக்க முடியாது என்பது இல்லை. பறப்பதற்கு தயாராக இருந்தோம். பறப்பதற்கான நேரம் வந்து விட்டது.
![]()
|
டவுட் தனபாலு:
'அ.தி.மு.க., கூட்டணி என்ற, கூண்டில் இருந்து வெளியேறி பறக்க போகிறோம்' என்பதைத் தான், இப்படி நாசுக்கா சொல்றீங்களோ... அங்க இருந்து நீங்க பறந்துட்டா உங்களை விட, அதிகமா சந்தோஷப்படுவது, அ.தி.மு.க.,வினரா தான் இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
: எதிர்க்கட்சி தலைவர்களை, அவர்களது பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்வதை ஏற்க முடியாது. பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறி வைக்கப்படுகின்றனர்.
டவுட் தனபாலு:
காங்கிரசுக்கும், உங்களுக்கும் ஆகவே ஆகாதே... நிஜமாகவே ராகுல் தகுதி நீக்கத்துக்காக வருத்தப்படுறீங்களா அல்லது பிரதமர் மோடியை விமர்சிக்க கிடைச்ச வாய்ப்பை தவற விடக் கூடாதுன்னு நினைக்கிறீங்களான்னு, 'டவுட்' வருதே!
மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ., சின்னதுரை
: குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1,000 ரூபாய் கிடைக்காதோ என்ற அச்சம், பரவலாக ஏற்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவியர் அனைவருக்கும், 1,000 ரூபாய் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு:
தமிழக அரசின் கணக்குப்படி, அரிசி ரேஷன் கார்டு வச்சிருக்கிற அனைவருமே ஏழைகள் தான்... ஆனா, மகளிர் உரிமை தொகைக்கு மட்டும், கண்டிப்பா அந்தக் கணக்கை எடுத்துக்கவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் சிதம்பரம்:
எந்தவிதமான விவாதமும் இன்றி, நிதி மசோதாவை நிறைவேற்றுவது, மோசமான பார்லிமென்ட் ஜனநாயகம். இது, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
![]()
|
டவுட் தனபாலு:
பார்லிமென்ட்ல விவாதிக்க மாட்டோம்னு, ஆளுங்கட்சி தரப்பு சொல்லவே இல்லையே... பார்லிமென்டை முடக்கியதில், உங்க கட்சியினரும் அமளியில் ஈடுபட்டாங்களே... அதனால, மோசமான ஜனநாயகத்துல உங்க கட்சிக்கும் பங்கிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா:
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, நிச்சயம் நான் தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., என்பது, எம்.ஜி.ஆர்., போட்ட விதை. அதை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழிவந்த நாங்கள், கட்சியை சிதற விடாமல் ஒன்றிணைத்து, லோக்சபா தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம்.
டவுட் தனபாலு
: இப்படித்தான் சட்டசபை தேர்தலுக்கும் சொன்னீங்க... இப்ப, லோக்சபா தேர்தலுக்கும் சொல்றீங்க... தேர்தல்கள் வரும், போகும்... உங்க சபதம் மட்டும் மாறவே மாறாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
lll
காங்., மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி:
2018ல் பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்தில்வரும் சூர்ப்பனகையுடன் என் சிரிப்பை ஒப்பிட்டுப் பேசினார்; இதுவும் அவதுாறு தான். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கில் நீதிமன்றம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என, பார்ப்போம்.
டவுட் தனபாலு:
நிஜமாகவேமோடி அப்படி பேசி, உங்க மனசு புண்பட்டிருந்தா, அன்றைக்கே வழக்கு போட்டிருக்க வேண்டியது தானே... உங்க மனம் புண்பட்டதை விட, சோனியா குடும்பத்தினர் மனங்களை குஷிப்படுத்தவே, இந்த முடிவுக்கு வந்திருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll