வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் எப்போதாவது நில அதிர்வுகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நில அதிர்வு பீதியைக் கிளப்பிவிட்டது. பல நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வால், கட்டில் மேஜைகள், பாத்திரங்கள் ஆட்டம் காண, மக்கள் அலறி அடித்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். அதுவும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் அதிக பீதி அடைந்தனர்.
![]()
|
இந்த நில அதிர்வு, பிரதமர் அலுவலகத்தையும், மத்திய உள்துறை அலுவலகத்தையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. நில அதிர்வுகள் ஏறபட்ட அடுத்த நொடியே பிரதமர் இல்லத்திற்கு மொபைல் போன் அழைப்புகள் பறந்தன.
குறிப்பாக, பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் இந்த நில அதிர்வால் ஆடிப்போய்விட்டனர். இப்படிப்பட்ட சமயத்தில் கட்டடம் இடிந்து விழுந்தால் என்ன செய்வது என்பது குறித்து, இந்த அமைப்பின் சீனியர் அதிகாரிகள் ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
![]()
|
வழக்கமாக பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து பிரதமரை பாதுகாப்பதோடு, இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்களில் இருந்தும் பிரதமரைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், இதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கெனெ ஒரு சிறப்பு கார் தயார் செய்யப்பட்டுள்ளதாம். நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தால், பிரதமரை உடனே இந்த காரில் வைத்து அழைத்து சென்றுவிடுவார்களாம். இந்த கார் மீது எது இடிந்து விழுந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாதாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement