வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை- 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் இணைந்து வழங்கும் உயர்கல்விக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் ஏப்., 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
![]()
|
பிளஸ் 2 முடிக்கும் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் காத்திருக்கும் பெரிய சவாலே, அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதே. இந்த படிப்புக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்குமா, இந்த மதிப்பெண் வாங்கினா, இந்த கல்லுாரியில் இடம் கிடைக்குமா என பல்வேறு குழப்பங்களுக்கு விடை தேடிக்கொண்டு இருப்பவர்களா நீங்கள்...
உங்களுக்காகவே, 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் இணைந்து வழங்கும் உயர்கல்விக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் ஏப்., 5ல் துவங்கவுள்ளது.
இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் அரங்குகள் ஒரு கூரையின் கீழ் அமையவுள்ளன. காலை, மாலை இரு அமர்வுகளாக, பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாக விளக்கங்களை அளிக்கவுள்ளனர்.
பொறியியல், வேளாண்மை, மருத்துவம், சட்டம், கட்டடவியல், கலை அறிவியல், வணிகம், வெளிநாட்டு கல்வி என அனைத்து பிரிவுகளிலும் சேர்க்கை செயல்பாடுகள் மட்டுமின்றி, கவுன்சிலிங் நடைமுறை, நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, எதிர்கால வேலைவாய்ப்புகள் என நுட்பமான தெளிவை மாணவர்களும், பெற்றோரும் கருத்தரங்கு வாயிலாக பெற்று பயனடையலாம்.
தவிர, கல்விக்கடன் சார்ந்த விளக்கங்களையும், போட்டித்தேர்வுகள், தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளன. குறிப்பாக, பொறியியல் துறையில் பிரபலமாகி வரும் ட்ரோன், ஏ.ஐ., எம்.எல்., - ஐ.ஓ.டி., பிளாக் சைன், போன்ற புதிய பாடப்பிரிவுகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், வரவேற்பு குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
![]()
|
போட்டி, பரிசு...
கருத்தரங்கில் மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று, லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டிச்செல்லலாம். ஏப்., 5 முதல் 7 வரை நிகழ்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி 6:30 மணி வரை நடைபெறும். பிளஸ்2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ்1 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மத்திய, மாநில அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராவது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்விநிறுவனங்கள், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்விநிறுவனங்கள் ஸ்பான்சர்களாகவும் தினமலர் நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505-74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ பதிவு செய்துகொள்ளலாம்.அனைவருக்கும் அனுமதி இலவசம்.