பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அருகே கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கொத்தட்டை ஊராட்சிக் குட்பட்ட கொத்தட்டை, கே.பஞ்சங்குப்பம், தோப்பிருப்பு ஆகிய கிராமங்களில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை தாங்கி, கால்நடை மருத்துவ முகாமை, துவக்கி வைத்தார். சேந்திரக்கிள்ளை கால்நடை உதவி மருத்துவர் தமிழரசன், தலைமையிலான மருத்துவ குழுவினர், 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.
முகாமில், பேராசிரியர் ரெங்கசாமி, தொழில்சார் சமூக வல்லுநர் சிவகாமி, ஊராட்சி செயலர் முருகேசன், மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டவர்கள், பங்கேற்றனர்.