சென்னை-திருமலை திருப்பதி சிறப்பு தரிசனத்திற்கான ஏப்ரல் மாத டிக்கெட் முன்பதிவு நாளை நடக்கிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் 'ஆன்-லைன்' வாயிலாகவும் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 'ஆன்-லைன்' வாயிலாக 300 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்ய காலை முதல் இரவு வரையிலான பிரிவுகளில் தினசரி 35 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை ஒரு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 20 முதல் 24ம் தேதிக்குள் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
அதன்படி 'ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை காலை 11:00 மணிக்கு துவங்கும்' என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.