வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை -சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை (மார்ச் 27) காலை கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 5 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடக்கிறது.
![]()
|
இத்திருவிழாவையொட்டி மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி இன்று(மார்ச் 26) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். இரவு 7:00 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்துவார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகத்துக்கு பின் நெய்யபிேஷகம் துவங்கும். காலை 9:45 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
மாலை 6:30 மணிக்கு முளையடி பூஜை நடக்கிறது. நாளை முதல் ஏப்., 4 வரை தினமும் இரவு 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலி நடக்கிறது.
![]()
|
மார்ச் 28 முதல் ஏப்., 4 வரை காலை 11.30 மணிக்கு உற்ஸவபலி நடக்கிறது. ஏப்., 4 ஒன்பதாம் நாள் விழாவில் இரவு 10:00 மணிக்கு சுவாமி பள்ளிவேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏப்., 5 காலை 7:00 மணிக்கு உஷபூஜைக்கு பின் சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்தருளுகிறார். மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement