வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரிட்டனைச் சேர்ந்த, 'ஒன்வெப்' நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்3 ராக்கெட், இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது .

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோளை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்3 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.