சென்னை--வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் அமைப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்நேரத்தில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும்.
வரும் 27, 28ம் தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இதே நிலை தொடரும். வரும் 29ல் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.