வேளாண் துறை இணையதளம்: விபரம் தர விவசாயிகள் தயக்கம்

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | |
Advertisement
திருப்பூர்: அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய செய்யும் வகையில், உருவாக்கப்பட உள்ள 'கிரைன்ஸ்' இணையதளத்துக்கு, விபரங்களை தர விவசாயிகள் தயங்குவதால், வேளாண் துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.அரசு வழங்கும் சலுகை, உதவிகள், தகுதியான விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'கிரைன்ஸ்' என்ற இணையதள செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.இதில், வருவாய்த்துறை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


திருப்பூர்: அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய செய்யும் வகையில், உருவாக்கப்பட உள்ள 'கிரைன்ஸ்' இணையதளத்துக்கு, விபரங்களை தர விவசாயிகள் தயங்குவதால், வேளாண் துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.




latest tamil news



அரசு வழங்கும் சலுகை, உதவிகள், தகுதியான விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், 'கிரைன்ஸ்' என்ற இணையதள செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.


இதில், வருவாய்த்துறை, வேளாண், உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பேரிடர் மேலாண்மை, பட்டு வளர்ச்சி, வேளாண் பொறியியல், உணவு வழங்கல், வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, விதை சான்றளிப்பு என பல துறைகள் இணைக்கப்பட உள்ளன.

விவசாயிகளின் விபரங்களை ஒற்றைச்சாளர முறையில் பதிவு செய்வதன் மூலம், பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது, தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல், எளிதில் விண்ணப்பிக்க முடியும்.ஆதார் அட்டை, மொபைல் எண், போட்டோ, வங்கிக் கணக்கு விபரம், நில விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் தயங்குகின்றனர்.



வேளாண்மை துறையினர் கூறியதாவது:


மத்திய, மாநில அரசின் திட்டங்கள் முழுமையாக, தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் 'கிரைன்ஸ்' இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. விவரங்களை தர விவசாயிகள் தயங்குகின்றனர்.


நிலம் யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு தான் அரசு சலுகை, உதவி வழங்கப்படும் என்ற நிலையில், விபரங்களை வழங்காத விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்காத நிலை ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X