வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை; விளையாட்டு வீரர்களின் அரசு வேலைக்கு வழிகாட்டும்
வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உடற்கல்வி பாடத்தை
கொண்டு வரவேண்டும்.
பிளஸ் 1, பிளஸ் 2 ல் முதல் குரூப்பில் கணிதம்,
அறிவியல், 2வது குரூப் என்பது போல நான்காவது குரூப்பில் தொழிற்கல்வி
பாடத்திட்டம் உள்ளது. எலக்ட்ரிக்கல் அண்ட் மோட்டார் ரீவைண்டிங், தோட்டக்கலை
உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவர்கள் தொழில் சார்ந்த பாடங்களை
கற்று அதே துறையில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். விளையாட்டுக்கு என எந்த
பாடத்திட்டமும் இல்லை.
ஆறு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் பெயருக்கு உடற்கல்வி பாடத்திட்டம் தயாரித்து தேர்வு நடத்தி முடிக்கின்றனர். ஆர்வமுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். ஆனால் பொதுத்தேர்வு மதிப்பெண்ணோடு இந்த மதிப்பெண் சேர்க்கப்படுவதில்லை. பத்தாம் வகுப்புக்கு பின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எதிர்காலம் திசை திருப்பப்படுகிறது.
![]()
|
பிளஸ் 1, பிளஸ் 2 ல் கட்டாயத்தின் பேரிலோ, விருப்பத்தின் பேரிலோ முதல் குரூப், 2வது, 3வது குரூப் தேர்வு செய்கின்றனர். சிலர் விளையாட்டை அப்படியே விட்டு விடுகின்றனர். தேர்ந்தெடுத்த அறிவியல், பிற பாடங்களிலும் கவனம் செலுத்துவதில்லை.
மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தை தொடர வேண்டுமெனில் பிளஸ் 1, பிளஸ் 2 ல் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உடற்கல்வி பாடத்தையும் சேர்க்க வேண்டும். உடற்கல்வி தியரி, பிராக்டிக்கல், வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகளை சேர்த்து படிக்கும் போது மதிப்பெண் பெறுவதும் எளிது. விளையாட்டு துறை சார்ந்த தகவல்களை மாணவர்கள் விரும்பியும் படிப்பர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும்
நாடுகளில் உடற்கல்வி பாடத்திட்டம் இன்றியமையாதது. இந்தியாவில் விளையாட்டு
இரண்டாம் தர மனப்பான்மையுடன் பார்க்கப்படுகிறது. உடற்கல்வி பாடம்
எடுத்தவர்களுக்கு போலீஸ் தேர்வில் தனி மதிப்பெண் வழங்க வேண்டும். இதன்
மூலம் ராணுவம், போலீஸ், தீயணைப்பு துறையில் ஆர்வமாக பங்கேற்பர்.
உடற்கல்வி
ஆசிரியர்களாகவும் உருவாக முடியும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் உடற்கல்வி
பாடத்திட்டம் உள்ளது. தமிழக பாடத்திட்டத்திலும் இதை சேர்க்க வேண்டும்.
மழலைப் பருவத்தில் இருந்தே விளையாட்டுக்கும், பாடத்திட்டத்துக்கும்
முக்கியத்துவம் தரும் வகையில், வல்லுனர் குழுவை நியமிக்க வேண்டும். இவ்வாறு
கூறினர்.