கச்சத்தீவில் ரகசியமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (31) | |
Advertisement
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் ரகசியமாக புத்தர் சிலையை நிறுவியுள்ளதால் புதிய வரலாற்றை உருவாக்கவும், தற்போதைய சர்ச்சை அகற்றவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் கச்சத்தீவு உள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான இத்தீவில், இருநாட்டு மீனவர்கள் தங்கி மீன் பிடித்து, வலைகளை உலர்த்தினர். அந்த
A Buddha statue installed secretly in Kachchathivi  கச்சத்தீவில் ரகசியமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் ரகசியமாக புத்தர் சிலையை நிறுவியுள்ளதால் புதிய வரலாற்றை உருவாக்கவும், தற்போதைய சர்ச்சை அகற்றவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.


ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் கச்சத்தீவு உள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான இத்தீவில், இருநாட்டு மீனவர்கள் தங்கி மீன் பிடித்து, வலைகளை உலர்த்தினர். அந்த கால கட்டத்தில் சேதுபதி மன்னரின் அனுமதியுடன் மீனவர்கள் கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் அமைத்தனர்.


latest tamil news


மத்திய அரசு கச்சத்தீவை 1974ல் இலங்கைக்கு தாரைவார்த்தது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோனது. இருப்பினும் கச்சத்தீவு விழாவில் இந்தாண்டு வரை தமிழக பக்தர்கள் பங்கேற்றனர்.


இச்சூழலில் கச்சத்தீவு சர்ச்சில் இருந்து 100 மீட்டரில் தடுப்பு வேலிக்குள் ரகசியமாக அரச மரம் வளர்த்து இதன் கீழ் 3 அடி உயர புத்தர் சிலையை சமீபத்தில் நிறுவி உள்ளனர். இங்கு சோலார் மின் விளக்குகள் பொருத்தி, போதிமரம் புத்தர் கோயில் போன்று வடிவமைத்து உள்ளனர்.


இதன் மூலம் எதிர்காலத்தில் கச்சத்தீவில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க இலங்கை அரசு திட்டமிடுகிறது, என தமிழக மீனவர்கள் கூறினர்.


தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் என்.தேவதாஸ் கூறியதாவது: சீன துாண்டுதலில் இலங்கை அரசு கச்சத்தீவில் புதிதாக புத்தர் சிலை நிறுவி கோயில் போன்று வடிவமைத்து உள்ளது. இதனால் அந்தோணியார் சர்ச்சுக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும், எதிர்காலத்தில் சர்ச் விழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்க முடியாமல் போகும் நிலையும் உள்ளது.


திட்டமிட்டு புதிய வரலாற்றை உருவாக்க முயலும் இலங்கை அரசின் உள்நோக்கத்தை மத்திய அரசு முறியடித்து, புத்தர் சிலையை அகற்றி 1974 ஒப்பந்தபடி கச்சத்தீவை சுற்றிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க, வலைகளை உலர்த்த இலங்கையை வலியுறுத்த வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

jayvee - chennai,இந்தியா
28-மார்-202318:53:27 IST Report Abuse
jayvee அவரும் நல்லவர்தான்..பிரச்சனை அங்கில்லை.. அதை பரப்புவார்கள் தான் கொடியவர்கள். காசுக்கு மதம் மாற்றுவது ஒரு புறம்.. ஜாதி பிரச்சனை உண்டாகி மதம் மாறுவது மறுபுறம்.. மதம் இல்லா நாடே நல்லது
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
26-மார்-202321:02:19 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman கச்சத்தீவு இப்போது இலங்கையின் ஒரு பகுதி. அதில் இலங்கை அரசு புத்தர் சிலை வைத்தால் என்ன? சர்ச் காட்டினால் என்ன? இந்திய தமிழரகள் இதில் மூக்கு நுழைப்பது நல்லது அல்ல. இப்படியே போனால் இலங்கை தமிழ் நாடு விவகாரஙகளில் தலை நுழைக்கும். பரவாயில்லையா?
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
26-மார்-202318:11:01 IST Report Abuse
nagendirank புத்தர் சிலை நிறுவினால் மட்டும் போதாது . அவருடைய போதனைகளை அங்கே பரப்பி பொது மக்கள் பயன் பாட்டுக்கு விட்டால் புத்தர் ஆனந்தமடைவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X