வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பா.ஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள் என பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பா.ஜ., வின் ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் மோடி,‛ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில், தேஜஸ்வி தப்பிக்க முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்' என விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கை: பாஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள். நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலில் அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்வது எளிது.

எதிர்த்து போராடுவது கடினம். அந்த கடினமான பாதையை தான் எனது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.