ராகுலுக்கு எம்.பி. பதவி பறிப்பு: டில்லியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம்| Deprivation of MP post from Rahul: Congress protest against ban in Delhi | Dinamalar

ராகுலுக்கு எம்.பி. பதவி பறிப்பு: டில்லியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம்

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (33) | |
புதுடில்லி: போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி டில்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.காங்., முன்னாள் தலைவர் ராகுல் மோடி என்ற ஜாதியை குறித்து பேசியதால் கோர்ட் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் எம்பி பதவியை லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக

புதுடில்லி: போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி டில்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.



latest tamil news


காங்., முன்னாள் தலைவர் ராகுல் மோடி என்ற ஜாதியை குறித்து பேசியதால் கோர்ட் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் எம்பி பதவியை லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.


சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி, டில்லி போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி டில்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, ஜெயராம் ரமேஷ், வேணு கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். ராகுலை பாஜ., பேச விடுவதில்லை. ராகுல் தேசத்திற்காகவும், பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார். நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.



144 தடை உத்தரவு:


தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால், டில்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் போராட்டம்


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடந்தது.


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம் பி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


சென்னை தி.நகரில் மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கோபண்ணா, விஜய் வசந்த் எம் பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


latest tamil news


சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை வைத்தார். முன்னாள் தலைவர் தங்கபாலு மாநில நிர்வாகிகள் முருகானந்தம், தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


வடசென்னை கி ழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் திருவெற்றியூரில் சத்தியாகிரகம் போராட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி துரை ராஜ் உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.



latest tamil news


சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

டாக்டர் செல்லக்குமார் எம்பி, முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டுவிட்டர் பயோ எனப்படும் சுயவிவரக் குறிப்பில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என மாற்றம் செய்துள்ளார் ராகுல்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X