காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்: கனடா நாட்டு தூதருக்கு மத்திய அரசு ‛சம்மன்| Khalistan Supporters Atrocities: Center Summons Canadian Ambassador | Dinamalar

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்: கனடா நாட்டு தூதருக்கு மத்திய அரசு ‛சம்மன்'

Updated : மார் 26, 2023 | Added : மார் 26, 2023 | கருத்துகள் (2) | |
புதுடில்லி: கனடா நாட்டில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் போராட்டங்கள் நடந்ததால், அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் உள்ள மஹாத்மா காந்தி சிலையை, 2012ல் நம் அரசு பரிசாக வழங்கியது. இந்நிலையில், இச்சிலையை காலிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கனடா நாட்டில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் போராட்டங்கள் நடந்ததால், அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.




latest tamil news


வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் உள்ள மஹாத்மா காந்தி சிலையை, 2012ல் நம் அரசு பரிசாக வழங்கியது. இந்நிலையில், இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.



latest tamil news


இந்நிலையில், கனடா நாட்டு தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கனடா தூதரை நேரில் அழைத்து கடும் அதிருப்தியையும், கடும் கண்டனத்தையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிப்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X