பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவை போல, 'சீயூ' ஸ்டைலில் கோல் அடித்தததை கொண்டாட முயன்ற வியட்நாமை சேர்ந்த கால்பந்து வீரர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோ, கோல் அடித்த பின் மைதானத்தில் பெனால்டி கார்னரில் ஓடி சென்று திரும்பி, இரு கைகளை விரித்து சீயூ என கூறி கொண்டாடுவார். 2013ம் ஆண்டு செல்சா அணிக்கு எதிரான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் முதன்முதலாக ரொனால்டோ இதுபோன்ற கொண்டாட்டத்தை துவங்கினார்.
![]()
|
அது முதல், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ரொனால்டோவின் 'சீயூ' ஸ்டைல் கொண்டாட்டம் மிகவும் பிரபலமாகும். பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் ரொனால்டோ போல சீயூ ஸ்டைலில் கொண்டாடுவர்.
விளையாட்டு வினையானது என்ற நம்மூர் பழமொழிக்கு உதாரணமாக, வியட்நாமில் நடந்த 17
வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் கால்பந்து போட்டி பைனலில், கோல் அடித்த மகிழ்ச்சியில் இளம் வீரர் ஒருவர், பெனால்டிக் கார்னரில் சென்று குதித்து ரொனால்டோ போல 'சீயூ' செய்ய முயற்சித்தார்.
![]()
|
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. நெட்டிசன்கள் ' தம்பி, நமக்கு எதுக்கு இந்த வீண் வேலை' எனகலாய்த்து வருகின்றனர்.